New Bulletin – June 2018

NEWS FROM COMMISSIONS

PASTORAL CENTRE – REV. FR. LEON PRABHAKARAN

பொது நிலையினர் பணிக்குழு:

29.04.2018 வெலிங்டன் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குப்பேரவை மற்றும் நிதிக்குழு அமைப்பதின் முன்தயாரிப்பாக ஞாயிறு காலை 7.00 மற்றும் 9.00 மணி திருப்பலியில் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருட்பணி. மா.லியோன் பிரபாகரன் அவர்கள் தனது மறையுரையில் அன்பியங்கள் வழியாக பங்குப் பேரவை மற்றும் நிதிக்குழுவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கமாக இறைமக்களுக்கு எடுத்துரைத்தார். இதனை ஏற்பாடு செய்த பங்குத் தந்தையர்கள் அருட்பணி.அந்தோணிசாமி மற்றும் ஜோசப் சந்தோஷ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

விவிலியப்பணிக்குழு:

22.04.2018 ஞாயிறன்று கோவை ஜீவ ஜோதி மேய்ப்புப்பணி நிலையத்தில் மே மாதத்தில் நடக்கின்ற ஏடீளு-விடுமுறை விவிலியப் பள்ளியை முன்னிட்டு தமிழக விவிலியப்பணிக்குழு செயலர் அருட்பணி. உபால்டு அவர்கள் தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. 10-ம் பத்திநாதர் குருமடத்திலிருந்து 9 மாணவர்கள் உட்பட மறைமாவட்டத்திலிருந்து 12 பேர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பிய குருமட அதிபர் அருட்பணி. ஜோசப் பெர்ணான்டஸ் பெலிக்ஸ் அவர்களுக்கு நன்;றிகளும் ஜெபங்களும்.

29.04.2018 அன்று ஞாயிறு மாலை 3 மணிக்கு கோத்தகிரி-புனித மரியன்னை ஆலய ஏடீளு-வகுப்பு ஆசிரியர்களுக்கு மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்திலிருந்து திரு.குணசேகரன்-கிளாடிஸ் ஆசிரியை அவர்கள் வகுப்புகளை எடுத்தனர். இதனை ஏற்பாடு செய்த பங்குத் தந்தையர்கள் அருட்பணி. இருதயராஜ் மற்றும் அந்தோணி டேவிட் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

பல பணித்தளங்களில், மாணவ மாணவிகளுக்கு விவிலியத்தை கற்றுக்கொள்ளும் வகையில் மே மாத விடுமுறையை நன்முறையில் பயன்படுத்த ஏடீளு-விடுமுறை விவிலியப் பள்ளிகள் நடத்தப்பட்டன. திண்டிவனம் தமிழக விவிலியப்பணிக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஏடீளு புத்தகங்களை பெற்றுக்கொண்டு வகுப்புகளை நடத்திய பாய்ஸ் கம்பெனி-அன்னை வேளாங்கண்ணி ஆலயம், கோத்தகிரி-புனித மரியன்னை ஆலயம்,ரோஸ்மவுண்ட்-புனித ஜெபமாலை அன்னை ஆலயம், காந்தல்-குருசடி திருத்தலம்,பிங்கர்போஸ்ட்-புனித தெரசன்னை ஆலயம்,கூடலூர்-புனித மரியன்னை ஆலயம்,பந்தலூர்-புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் மற்றும் மறைமாவட்டத்தில் பல பணித்தளங்களில் ஏடீளு-விடுமுறை விவிலியப் பள்ளிகளை சிறப்பாக கொண்டாடிய பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட அருட்சகோதரர்கள் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு மேய்ப்புப்பணி நிலையத்திலிருந்து வாழ்த்துக்களும், ஜெபங்களும், நன்றிகளும்.

நற்செய்திப்பணிக்குழு:

12.05.2018 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அருளகம் மேய்ப்புப்பணி நிலையத்தில் நற்செய்தி பணிக்குழுவின் உபவாசக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஒப்புரவு அருட்சாதனம் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு நடைபெற்றது. கடந்த காலங்களில் உபவாசக்கூட்டத்திற்கு தொடர்நது உதவி செய்து வருகின்ற, மாற்றலாகி செல்கின்ற குடும்ப நல இயக்குநர் அருட்பணி வின்சென்ட் பால்ராஜ் அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவிக்கும் வகையில் நற்செய்திப் பணிக்குழுவின் சார்பாக மேய்ப்புப்பணி இயக்குநர் தலைமையில் பிரிவு உபச்சாரம் அளிக்கப்பட்டது. இதுவரையில் நற்செய்தி பணிக்குழுவிற்கு உதவி செய்த அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

பாத்திமா மாதா சுரூபம்:

மறைமாவட்ட ஆயரின் அறிவுரைப்படி மார்ச் மாதம் 17 முதல் மே மாதம் 18ம் தேதி வரை அந்தியூர் மறைவட்டத்தில,; மறைவட்ட முதன்மைகுரு வழிநடத்துதலில் பாத்திமா மாதா சுரூபமானது ஒவ்வொரு பணித்தளத்திலும் ஒருவாரக்காலம் வைக்கப்பட்டு மாதவின் பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறைமக்கள் மற்றும் பிற மத இனமக்கள் அன்னையிடம் ஜெபித்து பயனடைந்துள்ளனர். இதனை வழிநடத்திய அந்தியூர் மறைவட்ட முதன்மை குரு அருட்பணி. பாஸ்கல் ஜெகன்ராஜ் மற்றும் பங்குத் தந்தையர்கள் அனைவருக்கும் நன்றிகளும் ஜெபங்களும்.

மே மாதம் 18-ம் தேதி மாலை 3.00 மணியளவில் நகலூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் மறைப்பணி நிலைய இயக்குநர் தந்தை அவர்களின் தலைமையில் நற்கருணை ஆராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அருட்பணியாளர்கள் மார்க் மான்போர்டு, மா.லியோன் பிரபாகரன் மற்றும் பங்குத்தந்தை அமலதாஸ் அவர்களின் கூட்டுத்திருப்பலி நடைப்பெற்றது. அதன்பிறகு இறைமக்களின் ஆழ்ந்த பக்தியோடு இயக்குநர் தந்தையிடம் மாதாவின் சுரூபம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மாலை 5.30 மணிக்கு மாதவின் சுரூபம் சத்தி மறைவட்ட முதன்மைகுரு அருட்பணி. மரியஜோசப் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறைமக்கள் அனைவரும் பாத்திமா மாதாவின் கொடிகளை கைகளில் ஏந்தி பவனியாக சத்தி-புனித அருளானந்தர் ஆலயத்திற்கு மாதாவின்; சுரூபத்தை எடுத்துச்சென்றனர். அதன்பிறகு சத்தி மறைவட்ட முதன்மைகுரு, மறைப்பணி நிலைய இயக்குநர் மற்றும் அருட்பணி. மார்க் மார்போர்டு இவர்களின் தலைமையில் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை மற்றும் கூட்டுத்திருப்பலி நடைப்பெற்றது. 2018 ஜுலை 20 ம் தேதி வரை சத்தி மறைவட்ட முதன்மைகுரு வழிநடத்துதலில் மாதாவின் சுரூபமானது சத்தி மறைவட்டத்திலுள்ள ஒவ்வொரு பணித்தளத்திலும் ஒரு வார காலம் வைக்கப்பட்டு இறைமக்கள் பயனடையும் வகையில் மாதாவின் பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படும.; இதனை ஏற்பாடு மற்றும் உதவிகள் செய்த சத்தி மறைவட்ட முதன்மைகுரு அருட்பணி மரியஜோசப், அருட்பணியாளர்கள் அமலதாஸ், மார்க் மான்போர்ட், அருட்சகோதரிகள்; மற்றும் இறைமக்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

பணிக்குழுக்களின் செயலர்களின் பணிமாற்றங்கள்:

பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருட்பணி. மா.லியோன் பிரபாகரன் அவர்களுக்கு தாங்கள் பணியாற்றிய பணிக்குழுவிலிருந்து ஒத்துழைப்பும் அன்புறவும் நல்கி, பணிக்குழுக்களிலிருந்து பணிமாற்றம் பெறுகின்ற குடும்ப நல பணிக்குழு செயலர் அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ், பல்சமய உரையாடல் செயலர் அருட்பணி. அடைக்கலம் அமிர்தராஜ், மற்றும் மாதா தொலைக்காட்சி கலைத்தொடர்பு-இளையோர் இயக்கம் பணிக்குழு செயலர் அருட்பணி. சில்வெஸ்டர் விஜயன் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும். இனி தங்களது பணித்தளங்களில் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

FAMILY COMMISSION – REV. FR. VINCENT PAUL RAJ

திருமண தயாரிப்பு வகுப்புகள்;:

மே மாதம் 04,05,06 ஆகிய தேதிகளில் உதகை அருளகத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள:;

பெற்றோர் கருத்தரங்கு:

திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; மே மாதம் 06-ம் தேதி உதகை அருளகம் மறைப்பணி நிலையத்தில் நடைபெற்றது. குருக்களின் முயற்சியால் பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

மலரும் மண உறவு

மே மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் மலரும் மண உறவு தமிழக மண்டல மாநாடு நடைப்பெற்றது. நமது மறைமாவட்டத்தின் சார்பாக தலைமை தம்பதி. ஆனந்தன் ஷீலா (கூடலூர்) மற்றும் சென்னியப்பன் சாந்தி (உதகை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

This is the tentative time table for Marriage Preparation Course. If there arises any change it will be informed to you in due time.

Pages: 1 2 3 4 5 6 7 8 9